பறை - சொல்விளக்கம் (பறை தருவான் - திருப்பாவை 1)

பறை தருவான் - திருப்பாவை 1
பறை - சொல்விளக்கம்
--------------------------

நாராயணனே, நமக்கே பறை தருவான் - திருப்பாவை 1.
இறைவா நீ தாராய் பறை! ஏலோர் எம்பாவாய். - திருப்பாவை 28


பறை = படி, grain measure originally. Later in Middle East, Indus valley etc., the பறை grain measure was used to make a frame drum. புலை 'meat, stench' : புலி ‘meat-eating tiger', நரை - நரி ’black and white colored coat mammal: https://en.wikipedia.org/wiki/Indian_jackal'.

It is very interesting that Tamil has retained both meanings in old Tamil:
(a) (frame) drum as in the word paRaiyan2. துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந் நான்கல்லது குடியும் இல்லை (புறநானூறு).
(b) grain measure - 'நமக்கே பறை தருவான்' (as yajamAna doling out the grains for his aDiyaar).

The primary meaning of paRai is grain measure (படி). YajamAna (tamil: எஜமான்/எசமான். Old way of paying out the serfs by a lord = Indian jajmani system) giving the weekly (or so) dhAnyam using paRai. From this primary meaning, the secondary meaning of granting grace by god (as in Tiruppaavai) is derived. ANDAL's pun on the two meanings in Tamil - grain measure and frame drum - can be compared to women playing the paRai in Ancient Near East,  https://en.wikipedia.org/wiki/When_God_Was_a_Woman

முதலாந் திருப்பாவையில் ஆண்டாள் பேசுவது, 'விரும்பிய பொருள்' desired object என்ற அர்த்தத்தில். 'என்ன வேண்டுகிறோமோ அதைத் தருவான்.' 'கொஞ்சம் போட்டுக்கொடுங்க' என்று வேண்டினால், பெருமாள் அருள் கூடிக் கிடைக்கும்.

தமிழில் பல சொற்களில் இரண்டாம் உயிர்மெய் எழுத்தில் ற்/ட் போலி இருக்கிறது. தானியக் குவையில் *படிந்து* திவசத்தை அளப்பதைப் படி என்கிறோம். படிதல் பறிதல் என்றும் வரும். உ-ம்: குழி/வங்கு பறித்தல். இந்தப் படி/பறை கூலம் அளந்து கூலியாகக் கொடுத்தல் பறைதருதல் ஆகும். மிகப் பழைய வேளாண்முறை, மாந்தவியலில் Jajmani system of wages என்ப. நிலத்தோடு படிந்து/பறிந்து இருக்கும் கல் பாறை.

இன்னொரு முக்கியமான உதாரணம் தருகிறேன். தமிழ்ச் சொற்களின் இரண்டாம் உயிர்மெய் ற்/ட் போலி. பறபற/படபட என சிறகை விரித்து அடித்து பறவை மேலுந்தும் (Lift) சக்தியை உருவாக்குகிறது. எனவே, படபட/பறபற என்னும் அனுகரண ஓசைச்சொல் தருவது பறவை என்ற பெயர் - பறத்தல் பறவையின் தொழில்.

மடு என்றால் ஆழ்ந்து இருத்தல், பற்றியிருத்தல், அணைந்திருத்தல். "குலசேகரப் பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2)." மடி கன்று ஊட்டுவதால் மாடு என்ற பெயர். சுமையை மடுப்பது = சுமடு > சும்மாடு. ஒடுக்குமாடு = கொள்ளைப்பொருள். மாட்டுப்பெண்/மாற்றுப்பெண் - கைம்மாட்டிலே மாமியாருக்கு உதவும் பெண். தலைமாடு, கால்மாடு ~ தலைமாறு, கால்மாறு என்றும் வரும் (ட்/ற் போலி காண்க). ’தற்குறிக்கு மாட்டெறிந்தேன்’ என கல்வெட்டுக்களில் வரும். மாட்டு-மாற்று ஆக கையொப்பம் இடல். இவை மாடு/மாற்று = Substitute என்ற பொருளில் வருவதாகும்.

மாடு-/மாறு- “to do":

DEDR 4797 Ma. māṭuka to build, construct; māṭṭam making. Ko. ma·ṭm (obl. ma·ṭt-) fashion of doing things, action, wonderful thing; ma·ṛ- (ma·ṛy-) to do, act (< Badaga). To. soty mo·ḍ- to swear an oath (< Badaga). Ka. māḍu to do, make, perform, accomplish, cause, effect, prepare, manufacture, construct, build, execute, cultivate as a field; n. doing, making; māḍuvike, māḍuha doing, making, etc.; māḍisu to cause to make, do, perform, build, etc.; māṭa making, doing, work, business, performance, undertaking, manner, way, state of being nicely made, well-finished state, handsomeness, beauty, elegance; mār̤ =māḍu vb.mār̤ke doing, business, manner. Koḍ. ma·ḍ- (ma·ḍi-) to do; ma·ḍï burned clearing in jungle where grain is grown. Tu. māḍā̆vuni to cultivate as land, display, parade. Te. māḍ(i)ki manner, way, mode. Go. (Ko.) māṛ- to make (Voc. 2804). DED(S) 3931.

மாடுதல் - பண்ணுதல், செய்தல்  தமிழ் எதிர்மறையாக "மாட்டேன்" என்பதைப் புழக்கத்தில் வைத்துள்ளது. அவன் இந்த வேலையைச் செய்யமாட்டான். (எதிர்மறைப் பொருள்). உடன்பாட்டுப் பொருளிலே “கல்சா மாடுதி” எனக் கன்னடத்தில் வருகிறது,  இன்னும் கன்னடத்தில் மாடுதல் என்றால் செய்தல் என்னும் பொருள்தருகிறது.

முன்னின பணிமுறை மாற முந்துவார் (கம்பரா. ஊர் தேடு. 49).
இங்கே, கம்பன் மாறுதல் = செய்தல் என்னும் பொருளைப் பயன்படுத்துகிறார்.

கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்
தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்
பா மாறியார்க்கு உனைப்போற் பாரத் தனமிருந்தாற்
றாமாறி யாடுவரோ தான் (குமரகுருபரர்)
(பனவனுக்காகப் பா மாறியவர் = தருமிக்காகப் பாடல் செய்தவர் ஆகிய சிவபெருமான்.)

ட்/ற் போலி:
சோமாறு = சோம்பல் மிகச்செய்வது/வெளிக்காட்டுவது
தடுமாறு = தள்ளாடுதல், தள்ளாடல் பண்ணுவது
அலமாறு = அலைதலைச் செய்தல்
இவற்றில் எல்லாம் -மாறு < -மாடு 'to do' தொடர்புடையன.

அதேபோல், பறை தானியத்தில் படிந்து அளக்கும் அளவைக்கருவி. அதை நம் முன்னோர்கள் தாளக்கருவி ஆக்கினர்.

Often, the alveolar ṯ is realized as ṭ and ṟ. For example, (1) paṟai/paṭi "frame drum/grain measure" (2) paṭapaṭa/paṟapaṟa ideophone from which paṟa- "to fly", hence paṟavai 'bird'. maaṭu-/maaṟu- pair of verbs in Tamil and Kannada languages seems to contain alveolar ṯ  also. In many instances [1], the word-initial m- is lost, and consider the pair, aaṭu-/aaṟu- vs. maaṭu-/maaṟu-.

நா. கணேசன்

[1] Examples of word-initial m- loss in Dravidian:
முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)

கல்பட்டு நடராசன் அவர்கள் அமெரிக்க சாமன் (Salmon) மீன்
பற்றி விரிவாக எழுதி தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது நன்னீரில் பிறந்து, கடலின் உப்புநீரில் வாழ்ந்து, நன்னீருக்கு
மீண்டும்வந்து முட்டையிடும் மீன்வகை. இந்தியாவிலும்,
கங்கை நதியில் இந்திய சால்மன் மீன்கள் உண்டு. வங்காளியர்
அதன் சுவைக்காக மிக விரும்பி உண்ணும் மீன் இது.
இந்தியா முழுதும் உள்ள த்ராவிட/தமிழ்ப் பெயர் இந்த ஸால்மன்
மீனுக்கு இருப்பதை இங்கே ஆராய்வோம்.

தமிழ்ச் சொற்களில் முதலாக உள்ள ம்-
தமிழில் பல சொற்களிலே ம்- முதலில் வரும், பின்னர்
அந்த ம் அழிபட்டுச் சொற்கள் உருவாவது வழமை.
சில உதாரணங்கள்:
(1) மலர் > அலர்
(2) மாமரம் > ஆமர > ஆம்ர (வடமொழிகளில் தமிழ்ச்சொல்)
(3)  முழ்-/முட்டை/முண்ட > மண்டை > அண்ட ‘egg'; 
(இன்னும் வேதத்தில் அண்டம் என்ற சொல்வேர் தேடிக்கொண்டுளர்!)
(4) முன்னு-தல்  > உன்னு-தல்
(5) மோய்தல்:ஓய்தல்
(6) மோடு(முகடு) > ஓடு,  
(7) மிழ்-/மிண்டு/மிடுக்கு > மேழம் (மிழ்- மிஷ்- என வடசொல் ஆகிறது
மிஷதி - ஆட்டுக் கிடாக்கள் மிண்டுதல், சண்டையிடல்)
மேழகம் > ஏழகம் (சிலப்பதிகாரத்தில்).
(8) மூழ்கம் > ஊழ்கம் (= தியானம்)
(9) மடுத்தல் =  தீ மூட்டுதல் To kindle; 
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு
(10) முத்தி > உத்தி
...
இன்னும் பல. உங்களுக்கு தெரிந்த காட்டுகள் தரலாம்.

முள் என்ற சொல்லே ”உள்” என சொன்முதல் ம் இழந்து, பின்னர்
“உல்” என்றாகியது. முள்- “sharp edge". இது தச்சரின்
இழைப்புளி போன்றவற்றில் வரும் உளி (< முளி).
எனவே, முள் > உள்/உல் 
உல் ul , n. (J.) 1. Sharp stick or iron to peel coconuts; தேங்காயுரிக்குங் கருவி. 2. Impaling stake; கழு.
உல்லியம் [ ulliyam ] கிணறு.  முள் (> உள்/உல்) போன்ற கூர்நுனி கொண்ட ஆயுதங்களால் தோண்டும் கூவல். (கூ(ர்) ஆயுதங்களால் தோண்டுவது கூ+அம் = கூவல்/ம்).
உல்லியர் [ ulliyar ] கூவநூலோர். (water diviners)
உல்லுகம் [ ullukam ] கொள்ளி.
(நா. கதிரைவேற்பிள்ளை அகராதி)

முள்ளல்:உள்ளல் மீன் (Hilsa):

வங்காளிகள் முள்ளம்/உள்ளம் மீனை மச்சராஜா
என மீன்களின்மன்னன் எனக் கொண்டாடுகின்றனர்.
அதன் ஊன் மிகச் சுவையாக இருப்பதால், வசந்த 
நவராத்திரி என்று ஏப்ரல் மாதம் வரும் திருவிழாவில்
உள்ளம் என்னும் மீன்கள் இரண்டைப் படையலாக
சரசுவதிக்கு வைத்து வழிபட்டு எல்லா ஜாதியினரும்
 உண்கின்றனர். முட்கள் நிறைந்த மீன் உள்ளம்/உல்லம் ஆகும்.
முள்களில் இருந்து ஊனைப் பிரித்துண்ண நல்ல பயிற்சி வேண்டும்.
உள்ளம் என்ற பெயர் முள்ளம் என்ற ஆதிப்பெயரில் இருந்து பெற்றது 
என்பது வெள்ளிடைமலை. முள்கள் நிறைந்த முள்ளம் > உள்ளம்/உல்லம்
என்ற மீனைப் பற்றி மேலும் அறிய:



MTL:
உள்ளம் = 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha; உல்லம். 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; உல்ல மீன்வகை.

உல்லம் ullam, n. cf. உள்ளல். [T. ullāku.] 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha; மீன்வகை. உள்ளத்தை விற்று உல்லத்தைக் கொள். 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; கடல்மீன்வகை.

Obviously, this "uLLam" (hilsa fish) has nothing to do with "heart, mind". Sometimes, this fish is called uLLal as MTL records. 

“Deboning a hilsa is one of the most challenging tasks because in all other fish, there is only one central bone and other side bones. There is really nothing between the flesh. In a hilsa, there are bones in the flesh itself. It takes a lot of time to master the removal,” explains Rupam Banik, executive chef, The Peerless Inn.

"They are also caught in the sea, but some consider the marine stage of the fish as not so tasty. The fish has very sharp and tough bones, making it problematic to eat for some."

"The Hilsa is full of tiny bones which require trained eaters/hands to handle."

James Hornell, Fishing in many waters:
See how a fisherman in Kaveri floats and spreads a net to catch uLLal fish.
Hilsa is fund in Godavari, Kavaeri, Indus, Ganges, ... in Indian subcontinent.

Given all these, I suggest that, like many examples with m-, muLLam/uLLam (or) muLLal/uLLal is the name of hilsa fish in Tamil where m- is lost over time.

M. Winslow:
உல்லம், [ ullam, ] s. The sable fish, shad, ஓர்மீன். (c.) உள்ளத்தை விற்று உல்லத்தைக் கொள். Sell what you have and buy sable fish. [prov.]
உல்லங்கருவாடு, s. The salted sable fish.
கடலுல்லம், s. A kind of sable fish.
ஆற்றுல்லம், s. Another kind of the same.

Hobson-Jobson dictionary:
HILSA , s. Hind. hilsā, Skt. ilīśa, illiśa; a rich and savoury fish of the shad kind (Clupea ilisha, Day), called in books the 'sable-fish' (a name, from the Port. savel, quite obsolete in India) and on the Indus pulla (palla). The large shad which of late has been commonly sold by London fishmongers in the beginning of summer, is very near the hilsa, but not so rich. The hilsa is a sea-fish, ascending the river to spawn, and is taken as high as Delhi on the Jumna, as high as Mandalay on the Irawadi (Day). It is also taken in the Guzerat rivers, though not in the short and shallow streams of the Concan, nor in the Deccan rivers, from which it seems to be excluded by the rocky obstructions. It is the special fish of Sind under the name pulla or palla, and monopolizes the name of fish, just as salmon does on the Scotch rivers (Dr. Macdonald's Acct. of Bombay Fisheries, 1883).
[...]
1810. -- "The hilsah (or sable-fish) seems to be midway between a mackerel and a salmon." -- Williamson, V. M. ii. 154-5.

1813. -- Forbes calls it the sable or salmon-fish, and says "it a little resembles the European fish (salmon) from which it is named." -- Or. Mem. i. 53; [2nd ed. i. 36].

----------------

It is interesting that "pulai/pulavu" a word used for meat, stench, blood etc., in Dravidian languages is the name of the fish in Indus and also in Andhra.
Telugus call the muLLam/uLLam 'hilsa' as pulasa/polasa fish. In Sind, it is pulla or palla fish, while in Gujarat it is palva or pulva which is obviously from Dravidian pulavu/pulai (DEDR 4552; see also DEDR 4547)
4552 Ta. pulai animal food, stench; pulaicu raw meat; pulavu, pulāl flesh, raw meat, fish, smell of flesh or fish; pulavu (pulavi-) to smell raw flesh; pulaval smell of flesh or fish. Tu. poralů, poraḷů fishy smell; (B-K.) purāḷů bad smell as of a boil. Te. pola, polasu flesh, smell of flesh. / Cf. Skt. pala-, palala- flesh, meat. DED 3718.

Often, -u in first syllable changes to -i in spoken languages. For example,
pul "grass" becomes "pil" in spoken Tamil (புல்லு > பில்லு ‘grass' in ST). Similarly, muLisai/uLisai "the fish with many sharp bones = hilsa" has changed to iLisa in Bengali language. 

In many instances, a word-initial h- is added in North India.
For example, Tamil ERu 'male of buffalo' is Heruka in Buddhism (Bihar).
uuLi festival of Sangam is huuLi/hOli in North. aalatti > haarati.
appaLam > happaLam, erumai/emme > heramba 'buffalo' etc.,
Words of negation, like Tamil's alla and illai has also a h- added in
the from in North Dravidian. See:
iLisa, with an addition of h- word-initially, becomes hilisa or hilsa in Hindi.

In sum, "hilsa" one of the tastiest fishes of Indian rivers has Dravidian names all over Indian subcontinent.

N. Ganesan

8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் கொங்கு அருமை. இந்த பறை எனும் அளவு நான் என் இளமையில் வீட்டுப் பெரியோர் பேச்சில் கேட்டுள்ளேன்.
பேசுதலைப் ,பறைதல் என்பது இப்போ மங்கிவிட்டது; ஆனாலும் சில பெரியவர்கள் வாயில் ஒலிக்கிறது.

Anonymous said...

அருமையான விளக்கம்.. பயனுள்ளதாக இருந்தது...

நன்றி
அன்புடன்
ஆதவன்

குமரன் (Kumaran) said...

நல்ல விளக்கங்கள் கணேசன் ஐயா. நன்றி.

மு.வேலன் said...

விளக்கங்கள் அருமை! நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான கட்டுரை கணேசன் ஐயா! கூடவே பல ஐயங்கள் இருக்கு!
(சந்தேக ஐயத்தைச் சொன்னேன்! ஐயமும் பிச்சையும் ஐயத்தை அல்ல! :)))
கொஞ்சம் டயம் கொடுங்க! பந்தலில் பாவைப் பதிந்து விட்டு மீண்டும் வருகிறேன்! :)

//பறை தானியத்தில் படிந்து அளக்கும் அளவைக்கருவி. அதை நம் முன்னோர்கள் தாளக்கருவி ஆக்கினர்//

குடம், கடம் ஆக வில்லையா?
கப், ஜலதரங்கம் ஆக வில்லையா?
ஹா ஹா ஹா!
அதே போல பறையோ? ரசித்தேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாவைப் பதிவில் பறையைப் பற்றி ஒரு புதிராய் கேட்டிருந்தேன்! அதற்கு அழகான விளக்கப் பதிவு போல் இருக்கு இது! நன்றி கணேசன் ஐயா!

//தமிழில் பல சொற்களில் இரண்டாம் உயிர்மெய் எழுத்தில் ற்/ட் போலி இருக்கிறது//

உண்மை தான்!

//படிதல் பறிதல் என்றும் வரும்//

இதை "மட்டுமே" வைத்து படி, பறை ஆனது என்று சொல்லி விட முடியுமா?
எழுத்தாராய்ச்சி சரி தான்! ஆனால் சொல்லாராய்ச்சி, பொருள் ஆராய்ச்சியும் வேண்டும் அல்லவா?

கணேசன் ஐயாவுக்கு இவையே என் கேள்விகள்:
1. ற்/ட் போலியின் வண்ணம்,
படி=பறி ஆகும்! பறை எப்படி ஆகும்?

2. வேறு இலக்கியங்களில் பறை, இதே பொருளில் பேசப்படுகிறதா?

3. பறை = அளக்கும் கருவி! (பின்னாளில் இசைக் கருவி ஆனது)
இறைவனை அளக்கச் சொல்கிறாள் என்ற பொருள் அழகாத் தான் பொருந்தி வருது! ஆனால், "பறை" திருப்பாவையின் மற்ற பாடல்களிலும் வருது! இதைப் பாருங்கள்!

//பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு//
தூங்கி எழுந்திருக்கும் போதே யாராச்சும் அளப்பார்களா? கூலி கொடுப்பார்களா?

//போற்றப் பறை தரும் புண்ணியனால்//
போற்றினால் மட்டுமே போதுமா? உழைத்தால் தானே அளப்பார்கள்?
(ஆனால் மன்னனைப் போற்றிப் பாடியதால், புலவர்களுக்கு மன்னன் அளந்தான் என்றும் பார்க்க வேண்டி இருக்கு! எத்தனை பரிசில் பாடல்கள் இருக்கு சங்க இலக்கியத்தில்! அதில் இந்தப் "பறை" வருகிறதா கணேசன் ஐயா?)

//அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்//
அங்கு அப் பறை கொண்ட வழியை-ன்னு கொள்ளும் போது அளக்கும் கருவி தான் பொருத்தமா இருக்கு!

//ஆயர் சிறுமியரோமுக்கு "அறை பறை" மாயன் மணி வண்ணன்//
அறை பறை என்கிறாள்! - அப்போ இது அளக்கும் கருவியா? வாத்தியக் கருவியா?

Unknown said...

அன்புடைய கணேசன் அவர்களே,
அருமையான பறை சொல் விளக்கம் பதிவில் தந்தமைக்குப் பாராட்டு. நன்றி.
தங்களின் இந்தக் கட்டுரையால் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் பயன்பெற்று மகிழ்வுறும்.
வணக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்.
அன்பன் ராதாகிருஷ்ணன், ஹூசுடன்,திசம்பர் 25, 2008.

Anonymous said...

> பறை தருவான் - திருப்பாவை 1
> பறை - சொல்விளக்கம்
> --------------------------

> நாராயணனே, நமக்கே பறை தருவான் - திருப்பாவை 1.

> பறை = படி, grain measure originally. Later in Middle East,
> Indus valley etc., the பறை grain measure was used
> to make a frame drum.

> மிக அழகான விளக்கம். பறை தருதல் என்றால் படியளத்தல் என்று பொருள்

சொல்லுகிறீர்கள். "ஏதோ பெருமாள் படியளக்கிறார், வாழ்க்கை ஓடுகிறது" என்னும்
சொலவடை உண்டு.

ஆச்சார்யர்கள் பறை என்பதை கைங்கர்யப் பிராப்தி என்று பொருள் கொள்ளுகின்றனர்.
அதாவது இறைவனுக்கு தொண்டு செய்யும் வாய்ப்பு. இந்த வாய்ப்பும் அவன் தந்தால்
உண்டு! மிக ஆச்சர்யமான வகையில், எங்களூர்காரரான மாணிக்கவாசகர் சிவபுராணத்தில்
பேசும் "அவன் அருளால் அவன் தாள் வணங்கி" என்பதன் நேரடிப்பொருளாக பாசுரம்
அமைக்கிறாள் விட்டுசித்தர் பெண். "நாராயணனே நமக்கே பறைதருவான்" என்றால்
நாராயணன்தான் நமக்கு இறைத்தொண்டு வாய்ப்பளிப்பான். அவ்வாய்ப்பைப் பெறுவதற்கு
நாம் நோன்பு செய்வோம் வாருங்கள்! என்று பொருள். இந்த வரியை மட்டும் ஒருமணி
நேரம் வியாக்கியானம் செய்கிறார் வேளுக்குடி கிருஷ்ணன். நேற்று பதிவு செய்து
கொண்டிருந்தேன், இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது! எதற்கும் ஒருநடை இங்கு
போய்வாருங்கள்.

http://www.ibiblio.org/ramanuja/thiruppavai/

நீங்கள் சுட்டுகிற வண்ணம் ஈடு உரையில் பழம் தமிழ் சொற்கள்
நிரம்பக்கிடைக்கின்றன.

பறை என்பதை வாத்தியம் என்றும் பொருள் கொள்கின்றனர். கண்ணாடி, விசிறி, பறை போன்றவை சிறார்களுக்கு பாவை காலத்தில் தரும் வழக்கம் இருந்திருக்கிறது. சின்னதாக சத்தம் எழுப்பிக்கொண்டு காலையில் நீராடப்புகுதல்! அக்காலத்தில் அதிகாலை வேளையில் துஷ்ட விலங்குகள் எங்காவது ஒளிந்திருந்தால் அவை பறை சத்தம் கேட்டு ஓடிவிடும்.

இதன் பின்நவீனத்துவப் பார்வை என்னவெனில், ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் பறை எனும் வாத்தியம் பறைச்சேரிகளில் மட்டுமல்ல பார்ப்பனச்சேரியிலும் ஒலித்திருக்கிறது
என்பது!

கண்ணன்