test ‘எதிரொலி’

தமிழ்மணத்தில் Apostrophe(') குறியைப் பயனித்தால் தலைப்பு காணாமல் போய்விடுகிறது என்று ஜாம்பஜார் ஜக்கு, ஆசிப் மீரான், ... குறிப்பிட்டிருந்தனர். ஒரு தீர்வைக் கண்டேன். பகிர்ந்துகொள்கிறேன்.

இடப்புற ஒற்றை-மேற்கோள்: & lsquo; வலப்புற ஒற்றை-மேற்கோள்: & rsquo; உதவும்.
(when you use, type without any space after & sign. i.e., lsquo; or rsquo; should immediately follow ampersand (=& ) sign without gap).

உ-ம்:
& lsquo;எதிரொலி& rsquo;

(ஒற்றை மேற்கோள் குறிகள் ஆவதற்கு &-க்கு அப்புறம் இடைவெளி இருக்கக் கூடாது.)

பயன்பட்டால் பதில் அனுப்பவும்.
வேறு ஏதாவது முறையும் இருக்கலாம், தெரிந்தால் சொல்லித்தரலாமே.

நா. கணேசன்

rsquo = right single quotation mark = வலப்புற ஒற்றை-மேற்கோள்
lsquo = left single quotation mark = இடப்புற ஒற்றை-மேற்கோள்


http://jambazarjaggu.blogspot.com/2009/08/bug.html
[Begin Quote]
தமிழ்மணத்தில் ஒரு BUG?

இதுல இன்னா பொடி இருக்குதோன்னு டென்ஷன் ஆவாதீங்க தலீவா! மெய்யாலுமே தமிழ்மணத்துல ஒரு bug இருக்கிற மாதிரி கீது!

இன்னா மேட்டருன்னா நீங்க பதிவுக்கு தலைப்பு வைக்கும் போது தலைப்புல ' அப்டீங்கிற எளுத்த (அதான் வாத்யார் apostrophe இல்லாங்காட்டி சிங்கிள் கோட்) யூஸ் பண்ணீங்கன்னு வைங்க தமிழ்மணம் உங்க பதிவ திரட்டும் போது சுத்தமா தலைப்பே காணாம பூடுது!

உதாரணமா இப்டி எல்லாம் தலைப்பு வைச்சீங்கன்னா கண்டிப்பா தமிழ்மண முகப்புல உங்க தலைப்பு தெரியாது!!!

1) Don't Miss it
2) 'அதுவும்', 'இதுவும்'
3) அவரு சொல்றாரு 'ஹி..ஹி'

இன்னா, சொன்னா நம்ப மாட்டீங்களா? சரி ஒரு தபா இப்டி தலைப்ப வச்சு இன்னா ஆவுதுன்னு பாத்து சொல்லுங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
[End Quote]

http://asifmeeran.blogspot.com/2009/08/blog-post_6523.html
[Begin Quote]
பதிவின் தலைப்பு எங்கே?
தமிழ் மணத்தில் இணைக்கப்படும் பதிவுகளில் சில சமய்ங்களில் தலைப்பு காணாமல் போவதை நீங்கள் கண்டிருக்கலாம் சற்று முன்னர் நான் இணைத்த 'காஞ்சிவரம்' திரைப்படத்திற்கான விமர்சனமும் தலைப்பில்லாமல் முண்டமாக (என்னை மாதிரியே) வந்து தொலைத்திருக்கிறது.

ஏன் இப்படி நேர்கிறது?
இதற்கு முன்னர் ஜெஸிலாவின் பதிவிற்கும், பைத்தியக்காரனின் பதிவிற்கும் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. தமிழ் ம்ணத்திடம் ஏன் இப்படி?' என்று கேட்டு முன்னர் எழுதியிருந்தேன்.
சில சமயங்களில் மேற்கோள் குறியிட்டு (",") எழுதினால் இப்படி நிகழ்ந்து விடுவதாகவும் இதை சரிசெய்யும் முயற்சிகளில் தொழில்நுட்பக்குழு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் சொல்லியிருந்தார்கள். கதை விடுகிறார்களோ என்று நினைத்துத்தான் மேற்கோள் காட்டி தலைப்பு வைத்தான்.

கதையின் நீதி:
உன்னைப் போல எல்லாருமே 'ஃபிராடு' என்று எண்ணாதே!!

பிகு
இதெல்லாம் ஒரு பதிவாடே என்று திட்டாதீர்கள்
எவ்வளவு பெரிய தொழில் நுட்பக் குறிப்பைத் தந்திருக்கிறேனே என்று வாழ்த்தி விட்டு போங்க!
[End Quote]

3 comments:

K. Sethu | கா. சேது said...

இடது ஒற்றை மேற்கோள் (U+2018) மற்றும் வலது ஒற்றை மேற்கோள் (U+2019) பயன்படுத்தி உள்ளீர்கள். தமிழ்99 வி.ப. நியமத்தில் தேவையென உள்ளடக்கப்பட்டுள்ள அவ்விரண்டும் மற்றும் இடது இரட்டை (U+201C), வலது இரட்டை (U+201D) மேற்கோள்கள் ஆகிய நான்கும் தமிழ் உரைகள் ஆக்கங்களுக்குத் தேவைப்படுபவனா?

நேரிய ஒற்றை (U+0027) மற்றும் நேரிய இரட்டை ( U+0022) ஆகிய இரண்டு மட்டும் போதாதா?

மேற்குறிப்பிட்ட 6 மேற்கோள் குறிகளின் ஒருங்குறி ஆங்கில பெயர் பட்டியல் : http://rishida.net/scripts/uniview/getName.php?list=2018%202019%20201C%20201D%2027%2022

அன்புடன்
கா. சேது

K. Sethu | கா. சேது said...

தங்களது முழுப்பதிவும் தற்போதுதான் கண்டுள்ளேன். நான் பின்னூட்டம் இட்ட போது தலைப்பு மட்டும்தான் பதிவில் தெரிந்தது. அதுவும் "test" எனத் தொடங்கியதால் எதை ஆய்வு செய்துகொண்டுள்ளீர்கள் என்பதை ஊகிப்பவர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறீர்கள் என எண்ணி அப் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

இப்போது தங்கள் முழுப்பதிவை வாசிததுள்ளேன். தாங்கள் சிக்கலுக்கு உரியாதாகக் குறிப்பிடும் "ஒற்றை மேற்கோட்குறி" ஆனது Apostrophe என்பதைத்தானே ?

இடைவெளியற்ற & lsquo, & rsquo என்பன html tags களா?

முழுமையாக ஆக்கப்பட்டிருக்கும் தமிழ்99 விசைமாற்றி ஒன்றைப் பயன்படுத்தினால் அதன் வழி பின் வரும் விசையடித் தொடர்களுடன் இட, வல ஒற்றை / இரட்டை மேற்கோள் குறிகள் பெறலாம்.

^7 --> ‘
^8 --> ’
^9 --> “
^0 --> ”

(6 க்கான விசையில் shift state இல் உள்ள caret எனப்படும் விசை அடித்து அடுத்ததாக {7,8,9,0} எண்களில் தேவையான மேற்கோளுக்கான ஒன்றை அடிக்க வேண்டும் )

கா. சேது

நா. கணேசன் said...

சேது கேட்டார்:
> இப்போது தங்கள் முழுப்பதிவை
> வாசித்துள்ளேன். தாங்கள் சிக்கலுக்கு
>உரியதாகக் குறிப்பிடும் "ஒற்றை
> மேற்கோட்குறி" ஆனது Apostrophe
> என்பதைத்தானே ?

ஆம்.

நன்றி!
நா. கணேசன்