தமிழ் இலக்கியத்தின் ஊளி விழா - ஹோளி பண்டிகை

நேற்று கூகுள் முகப்பில் இந்தியாவின் ஹோளி பண்டிகையைக் காட்டிக் கொண்டிருந்தது.
http://www.google.com/search?hl=en&source=hp&q=holi
இந்திய மொழிகளின் பண்டைய தொடர்புகளுக்கு ஹோளி விழா முக்கியமானது.

இப்பண்டிகைப் பெயரில் முக்கியமான தமிழ் வினைச்சொல் இருக்கிறது. கொங்குநாட்டில், “நாய் உளைக்கிறது” என்ற வாக்கியத்தை எங்கும் பரவலாய் நாடோறும் கேட்கலாம். ’நாய் வித்த காசு உளைக்காது’, ‘உளைக்கிற நாய் கடிக்குமா?’ எனும் பழமொழிகள் கேட்கலாம். நரி உளைத்து ஓசை எழுப்பலை மணிமேகலைக் காப்பியம் “உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும்’ என்று குறிக்கிறது. பிங்கலந்தை நிகண்டில் உளை = எடுத்தல் ஓசை (High tone of voice) என்பது வரையறை. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாலிவதைப் படலத்தில் பேரோசை எழும் இடத்தில், ’உளைத்த பூசல்’ என்கிறார்.

வார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன்,
நீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே,
வேர்த்து மண் உளோர் இரிந்து, விண் உளோர்கள் விம்ம, மேல்
ஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. 11

இடித்து, உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று,
அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம்
துடிப்ப, அங்கு, உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. 12
(வாலி வதைப் படலம், கம்பர்)

“உளைத்தல்” என்ற வினைச்சொல் பிறப்பிக்கும் பெயர்ச்சொல் ஊளி (அல்லது) உள்ளி என்றாகும். ஊளி என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஹோளி என்னும் வட இந்தியச் சொல்லுக்கும் உள்ள உறவுகள் சிலவற்றைப் பார்ப்போம். வளைந்து ஆடும் கூத்து வள்ளிக்கூத்து, அதுபோல் உளைந்து ஓசை எழுப்பிக் கொண்டாடும் விழா உள்ளிவிழா. உளைத்தல் என்ற கொங்கு நாட்டில் இன்றும் புழங்கிவரும் வினைச்சொல்லில் பிறக்கும் ’உள்ளி விழா’ என்னும் காமன் பண்டிகை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (அகநானூறு 368).

உயிரெழுத்தில் தொடங்கும் சில வார்த்தைகளில் வகர மெய்யோ (உ-ம்: ஒக்கலிகர் > வொக்கலிகர் (Vokkaliga in Karnataka), அக்கா > வக்கா, உடையார் > வொடெயாரு (மைசூர் மன்னர்) ...), ஹகர மெய்யோ ஏறுதல் பேச்சு மொழி இயற்கை. எடுத்துக் காட்டாக, ஊளி > ஹூளி/ஹோளி, ஏலராஜா (வேளராஜா) > ஹேலராஜா, எருமை/எம்மெ (கன்னடம்) > ஹேரம்பம், ஆரத்தி (ஆலத்தி) > ஹாரத்தி. அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம் [1].

ஊளி - பேரோசை, ஹோளி பண்டிகையின் ஆரவாரம் போல்.

திருவாய்மொழி - நம்மாழ்வார்:

நாளும் எழநிலம் நீரும் எழவிண்ணும்
கோளும் எழஎரி காலும் எழமலை
தாளும் எழச்சுடர் தானும் எழஅப்பன்
ஊளி எழஉல கம்உண்ட ஊணே.
7.4.4

இப் பாசுரத்துக்கு ஈடு : நான்காம் பாட்டு. திருவரங்கத்தில் "அடைய வளைந்தானுக்குள்ளே புகும்போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம்போலே, திருவயிற்றிற் புகுகிறபோது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர" என்றும், "இவற்றை உறிஞ்சுகிற போதை ஒலிகாண்" என்றும் பேசுகிறது. மஹா பிரளயத்தில் காத்த பிரகாரத்தை அருளிச்செய்கிறார். அன்றிக்கே, இப்போது இருப்பது போன்று மார்க்கண்டேயன் திருவயிற்றுள் ஒன்றும் அழியாது இருக்கக் கண்டான் என்கிற புராணத்துக்குத் தகுதியாக அவாந்தர பிரளயத்தை இவ்விடத்தே அருளிச்செய்கிறாராகவுமாம் என்று அருளிச்செய்வர்.

காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்
எஸ். இராமச்சந்திரன்
http://www.sishri.org/kaaman.html
”அகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டோம். கொங்கு நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது. இறையனார் களவியல் நூற்பா 16-17க்கான உரையில் ‘கருவூர் உள்ளிவிழாவே’ என்ற குறிப்பு காணப்படுகிறது. ஊளி விழவு என்பது பிரதியெடுப்போரால் உள்ளி விழவு என்று தவறாக எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஊளி என்ற சொல் பேரோசை என்ற பொருளில் நம்பிள்ளையின் ‘ஈடு’ முப்பத்தாறாயிரப்படி ஏழாம் பத்தில் (4:4) இடம்பெற்றுள்ளது. உளை, ஊளை என்ற சொல் வழக்குகளையும் இதனோடு தொடர்புபடுத்தலாம். சமஸ்கிருதத்தில் ஹுல ஹுலி என்ற சொல் மகளிர் மகிழ்ச்சியில் எழுப்பும் பொருளற்ற ஓசை எனப் பொருள்படும். இந்த அடிப்படையிலேயே காமன் பண்டிகை என்பது வட இந்தியாவில் ஹோலகா ஹோலிகா என்றும் ஹூளா ஹூளி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விழா நாளில் ஆடவரும் பெண்டிரும், குறிப்பாக இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக்கொண்டும், சாயப் பொடிகளை தூவிக்கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக்கொண்டும் குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் திரிவர். இதுவே தற்போது ஹோலி என்று வழங்கப்படுகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தததமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

நா. கணேசன்

[1] உம் > ஹும் கொட்டுதல்.
1/1/2003 பாரிஸ் பல்கலையின் ழான் - லூய்க் செவ்வியாருக்கு நான் எழுதிய மடல். இந்தக் காட்சி (16 வயதினிலே படம்) யுட்யூபில் கிடைக்கிறதா? கொடுத்தால் முன்கூட்டின நன்றி உரித்தாகுக.

At 17:02 01/01/03 +0100, Jean-Luc Chevillard wrote:

"avar collum vArttaikaLil ovvon2Rukkum huGkAram ceytu koNTE iruppEn2. illA viTTAl, avar pEccu mElE pOkAtu."
en2 carittiram, UVS, p.15, 2nd edition 1982, Chennai

The Story of my life, part I (1990) & part II (1994), Institute of Asian Studies
Madras (Chennai), M. Shanmukam Pillai and A. Thasarathan translate this as:
"I had to counter every word of his with a soft grunt of assent; otherwise he would stop speaking".

------------

We find this incident in village life too. "16 vayatin2ilE" is a pioneer movie in tamil. It was the first to start a trend in TN to depict village life. Ilaiyaraja, Bharatiraja, Bhagyaraj, ... shot into fame from that period.

In "16 vayatin2ilE", there is a scene where the village girl, Mayil walks with her companion, the retarded ChappaaNi to a river. Mayil's mother has died due to what CT texts call as "alar tURRu-tal". ChappaaNi assures Mayil of his help to her always.
ChappaaNi says something like:
"ammaa, aattukkup pOkaiyila en2n2aik kuuTTip pOkum; appa Etaavatu katai collum, naan2 um, um koTTittE varuvEn2. ippa ammaavum cettiTiccu. aan2aakka, nii Etaavatu collu mayilu. naan um, um koTTiTTE varEn2."

I think this "um koTTutal" in village life, depicted so nicely in 16 vayatin2ilE, is refered as "huGkARam koTuttal" by UVS in his autobiography.

uGkAram:huGkAram - a parallel in M. B. Emeneau's note on pappad in his Sanskrit studies. pappaTam:vappaTam (Cf. paruppu/pappu + aTai) becomes appaLam. In some dialects, even happaLa.

Happy new year,
N. Ganesan
(1-January-2003)

4 comments:

Anonymous said...

பங்குனி உத்திரத்தின் போது மாரியம்மன் பண்டிகைகள் தமிழ் நாட்டில் சகஜம். மாரியம்மன் பண்டிகைகள் முடியும் போது நடக்கும் கம்பம் பிடிக்கும் விழாவில் மஞ்சள்நீராட்டு என்பது வட இந்திய ஹோலியின் மறு வடிவம். மாரியம்மன் பண்டிகையின் நோக்கமும் ஹோலியின் நோக்கமும் ஒன்றே. நோயிலிருந்து பாதுகாத்தல்.

ராஜ நடராஜன் said...

நீண்ட ஆய்வுடன் கூடிய இலக்கிய பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

நீண்ட ஆய்வுடன் கூடிய இலக்கிய பகிர்வுக்கு நன்றி.

Kanmani said...


Where is the evidenco for Holi being celebrated in Oraiyoor?