ஓவியக்கவிஞர் அமுதோன் என்கிற அமுதபாரதியின் மரபுக்கவிதை

தாயுமானவன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியக்கவிஞர் அமுதோன் சித்திரம் வரைவதில் சிறந்தவர். ஏராளமான தமிழ்நூல்களுக்கு வடிவமைப்புச் செய்தவர். ஹைக்கூ கவிதை முன்னோடி. அமுதபாரதி என்ற பெயரில் பல மரபுக் கவிதைகள் யாத்துள்ளார். ஓவியக்கவிஞர் என்று கண்ணதாசனால் பாராட்டப்பெற்றவர்.

கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்களின் சந்தவசந்தம் குழுவில்  பாரதியார் திருவள்ளுவர் சிந்தனைத் திரட்டு (பேரா. தி. வேணுகோபாலன், 1992) நூல் முழுமையும் கிடைக்கிறது.  பாரதி என்ற தலைப்பின் கலிஃக்ராபியில்
அழகாக பா என்னும் முதலெழுத்தில் பேனாவை அமைத்துள்ளார் சைத்ரீகர் அமுதபாரதி!

                                            பாரதி!
                            பன்னிரு சீர் விருத்தம்

எளிதான சொல்வளைவில் புதிதான பொருள்விளைவில்
                        இனிதான கவிநெய்தவன்!
                        இதுவேஎன் வழியென்றும் பொதுவாகும் உணவென்றும்
                        எல்லார்க்கும் நெறிசெய்தவன்!
மெலிதான மேகத்தின் வேகத்தில் உருவாகும்
                        மழையாக அருள்பெய்தவன்!
                        மெல்லோசை வல்லோசை நல்லோசை யாவிலும்
                        மேவியே மனங்கொய்தவன்!
வலிதான உடல்வாகும் வளமான பொருள்வாகும்
                        வாழ்க்கையின் நலமென்றவன்!
                        வாளா விருப்பவர் தூளாய் விடக்குறிக்
                        கோளாய் குரல்தந்தவன்!
புலிஓடி வருவதென புயல்வேகம் பொழிவதென
                        போர்ப்பாடல் பலகண்டவன்!
                        பலகோடி நூறாண்டு பெயர்வாழும் நிலையாக
                        புகழ்சுப்ர மணிபாரதி!
                                                                    -
                                                                   ~ கவிஞர் அமுதபாரதி, 1992






அமுதபாரதியும் நானும்
      சிறகு இராமச்சந்திரன்
http://puthu.thinnai.com/?p=5287

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?


தின்ற பழங்கள்
மிஞ்சிய கொட்டைகள்
ஓ! எத்தனை மரங்கள்!
                ~ அமுதபாரதி


இந்த நாட்டில்
எந்த மனிதன்
அடுத்த அமுதோன்?





காணொளியில் இருப்பவர்கள் பாரதி நூல்களைத் தொகுத்து வெளியிட்ட சீனி விஸ்வநாதன், அமுத பாரதி:



0 comments: